Have you got the ultimate reality? 1991-12-06
Current language: Tamil, list all talks in: Tamil
The post is also available in: English, Spanish, German, French, Bulgarian, Czech, Greek, Finnish, Italian, Lithuanian, Dutch, Polish, Portuguese, Romanian, Russian, Turkish, Chinese (Simplified), Chinese (Traditional).
6 டிசம்பர் 1991
Public Program
Madras (India)
உண்மை தேடுபவர்கள் அனைவருக்கும் நான் தலை வணங்குகிறேன்.
நாம் சத்தியத்தை உண்மையாகத் தேடுபவர்களாக இருந்தால், அதில் நாம் நேர்மையாக இருக்க வேண்டும் மற்றும் உண்மையாகவும் இருக்க வேண்டும். அதன் மூலம் நமக்கு நாமே நேர்மையாக இருப்போம், மேலும் இந்த உலகில் நாம் நம்முடைய இருப்பை நியாயப்படுத்துவோம். இங்கு எத்தனையோ சாதகர்கள் இருக்கிறார்கள், காலை முதல் மாலை வரை அவர்கள் ஒரு வகையான சடங்கு, ஒருவிதமான தியானம், ஒருவிதமான பக்தி, ஒருவிதமான வாசிப்பு என்று வேலை செய்கிறார்கள். ஆனால் ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் அதன் மூலம் நாம் என்ன சாதித்தோம்? நாம் எங்கு இருக்கிறோம்? என்பதை. ஒரு தாயாக நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும், "என் குழந்தையே, நீ உன் தேடலில் அதிகமாக செய்து விட்டீர்கள், ஆனால் நீங்கள் என்ன கண்டுபிடித்தீர்கள்? நீங்கள் இறுதி யதார்த்தத்தை அடைந்துவிட்டீர்களா? வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ளதை நீங்கள் பெற்றுவிட்டீர்களா?" பாடப்பட்ட இந்தப் பாடல் மராத்தியில் உள்ளது - நான் விரும்புவது அவர்கள் சமஸ்கிருதத்தில் ஏதாவது பாடியிருக்கலாம், அவர்கள் சமஸ்கிருதத்தில் நன்றாகவே பாடுவார்கள்.
மேலும் ஆதி சங்கராச்சாரியாரின் பாடல்கள் மற்றும் எல்லா பாடல்தளும் பாடுவார்கள். நாளை அவர்கள் அதைச் செய்வார்கள். இந்தப் பாடல் நாமதேவாவால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது [அதாவது 1200களில்] பின்னர் ஒரு கவிஞர் பஞ்சாப் சென்றார், அங்கு நானக் சாஹிப் அவருக்கு மரியாதை செலுத்தினார், மேலும் அவர் அவரை பஞ்சாபி மொழியில் பாடல் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவர் பஞ்சாபி மொழியைப் படித்தார் மேலும் அவர் அத்தகைய பெரிய புத்தகத்தை எழுதியுனார். மேலும் "கிரந்த் சாஹிப்" லிருந்து பல வசனங்கள் உள்ளன. அவர் ஒரு சாதாரண தையல்காரர், மிகவும் சாதாரண தையல்காரர், அவர் மற்றொரு கிராமத்தில் கோர கும்பர் என்று அழைக்கப்படும் மற்றொரு துறவியைச் சந்திக்கச் சென்றார். மற்றொரு துறவியைச் சந்திக்கச் சென்றார். “கும்பர்” என்றால் குயவன், பானை செய்பவர்; மேலும் கோர கும்பர் தனது வேலைக்காக களிமண்ணை தயார் செய்வதில் மும்முரமாக இருந்தார். நாமதேவர் அவர் முன் நின்று, கூறினார், நான் இங்கு வந்தது நிர்குணத்தை-உருவமற்றதை பார்ப்பதற்காக, சைதன்யத்தைப் பார்ப்பதற்காக வந்தேன், ஆனால் இங்கே அது சகுணத்தில் உள்ளது, அது ஒரு வடிவத்தில் உள்ளது" என்று கூறினார். ஒரு விழிப்புணர்வு பெற்ற ஆத்மாவால் மட்டுமே, ஒரு துறவியால் மட்டுமே, இன்னொரு துறவியைப் பற்றி இப்படிச் சொல்ல முடியும், ஏனென்றால் அவர் இறுதி யதார்த்தத்தை அறிந்திருந்தார்.
ஆனால் விழிப்புணர்வு பெறாதவர்களால் இந்த வாழ்க்கைக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாது. கிறித்துவ மதத்தில் கூட, தாமஸ், இந்தியாவுக்கு வந்து, அவர் நிறைய நூல்களை எழுதியுள்ளார், அவை எகிப்தில் ஒரு குகையில் வைக்கப்பட்டன. அது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது அவரைப் பற்றி ஒரு புத்தகம் நாற்பத்தெட்டு வருட ஆராய்ச்சிக்குப் பிறகு எழுதப்பட்டு இருக்கிறது. ஆச்சரியமான விஷயம், அதில் முழுவதும் அவர் சஹஜ யோகாவைப் பற்றி, அதாவது நீங்கள் யதார்த்தத்தின் அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்பது பற்றி அதில் அவர் எப்படியெல்லாம் விவரித்துள்ளார். நிச்சயமாக, ஒவ்வொரு புத்தகமும், ஒவ்வொரு வேதமும் "உன்னை அறிந்துகொள்" என்றும் - நான் யார், நான் என்றால் என்ன என்பதை நான் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்கிறது. அப்படிச் சொல்லும்போது, நமக்குள் இருக்கும் சுயத்தை கண்டுபிடிப்பதே நம் முயற்சியாக இருக்க வேண்டும். "என் உடல், என் குரல், என் மூக்கு, என் நாடு, என், என்" என்று சொல்கிறோம் - இந்த "நான்" என்பவர் யார், இவை அனைத்தும் யாருக்கு சொந்தமானது? இந்த உத்வேகம் எங்கிருந்து உள்ளே வருகிறது? இந்த "நான்" நமக்குள் இருக்கிறது, நம் இதயத்தில் பிரதிபலித்துள்ளது.
உங்களிடத்தில் நான் கேட்டுக் கொள்வது நீங்கள் என்னைக் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள வேண்டாம். கண்மூடித்தனமாக இருப்பதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. ஆனால் அறிவியலில் உள்ளதைப் போன்ற ஒரு அனுமானத்தை நான் உங்களுக்கு சொல்கிறேன் - அது எப்படி நடக்கிறது மற்றும் அனைத்தையும் பற்றி. அது நிரூபிக்கப்பட்டால், நான் சொல்வதை நீங்கள் அனுபவபூர்வமாக உணர்ந்தால் பின்னர் நேர்மையான மனிதர்களாக நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேற்கு நாடுகளில் நமக்கு இங்கு இருப்பதை விட வேறு பிரச்சனைகள் உள்ளன, பிரமாண்டமான பிரச்சனைகள். முதலில் நான் இங்கிலாந்துக்குச் சென்றேன், ஆங்கிலேயர்களான அவர்கள் எப்படி இருப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்,அவர்களுக்கு புரிய வைப்பது எளிதல்ல – அதை உடைப்பது மிகவும் கடினம். ஆனால் அவர்கள் உடைக்கப்பட்டவுடன் பாண்டித்தியம் மிக்க அவர்கள், உடனே விரைந்து சென்று, பல்கலைக் கழகங்களிலும் வெவ்வேறு நூலகங்களிலும் , குண்டலினி பற்றி அனைத்தையும் தெரிந்து கொண்டார்கள். இங்குள்ள நாத்பந்திகளால் ஏற்கனவே நிறைய எழுதப்பட்டுள்ளது, அவர்கள் குண்டலினி எழுப்புதலுக்காக அதிகமாக உழைத்துள்ளனர். ஆனால் அது காணாமல் போய்விட்டது. சில ஜெர்மனியர்களும், மற்றவர்களும் இங்கு வந்தபோது, அவர்களிடத்தில் தந்திரீகர்களால் ஒருவித தவறான விஷயம் சொல்லப்பட்டது, அதனை அவர்கள் இங்கிருந்து எடுத்துச் சென்றனர்.
நான் படித்த ஜெர்மன் புத்தகத்தில் அப்படியொரு தவறான புரிதல் மற்றும் தவறான தகவல் தரப்பட்டுள்ளது, அதாவது உங்கள் வயிற்றில் குண்டலினி இருக்கிறது என்று. மேலும் அதற்கு அவர் பல விளக்கங்களையும் அளித்துள்ளார். அவர் மிகவும் கற்றறிந்தவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவர் என்ன கற்றுக்கொண்டார் என்று எனக்குத் தெரியவில்லை, அப்படித்தான் அவர் குண்டலினியைப் பற்றி விவரித்துள்ளார். இந்த அறிவு நீண்ட காலமாக நமக்குத் தெரியும். நாம் தெய்வீகத்தை அடைய மூன்று வகையான இயக்கங்களைக் கொண்டிருந்தோம். அதில் ஒன்று வேதங்கள் ஆகும். "வேதா" என்பது கூட "அறிவது" என்றுதான் பொருள்படும் - தாமஸ் "ஞானவாதிகள்" என்று அறிந்தவர்களை "க்ஞன" என்று அழைத்தார். தெற்கில் நீங்கள் "க்ஞன" அல்லது "ஞான" என்பதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் மராத்தியில் நாங்கள் "க்ஞன" என்று சொல்கிறோம். "ஞானி" என்ற சொல் அதே போல் அறிவுடைய நபர் என்பதிலிருந்து வருகிறது; வெளிப்புற அறிவிலிருந்து அல்ல, உங்கள் மன முயற்சிகள் அல்லது உணர்ச்சிவயப்பட்ட உணர்வுகளிலிருந்து அல்ல, ஆனால் அதற்கு அப்பாற்பட்ட ஒன்றிலிருந்து.
அவர்கள் அதே பாதையில்தான் முயற்சித்தார்கள், ஆனால் வேதங்களில் அவர்கள் சொல்லியிருப்பது, முதலில், முதல் ஸ்லோகம் சொல்ல வேண்டும், உங்களுக்கு ஸ்லோகம் தெரியாவிட்டால், இந்தப் புத்தகத்தைப் படித்துப் பயனில்லை. ஆனால் "அறிவு" என்றால் என்ன? - உங்கள் மத்திய நரம்பு மண்டலத்தில் அதை அறிவது; உங்கள் மனதினால் அல்ல அல்லது உடலினால் அல்ல, ஆனால் மிக உயர்ந்த மட்டத்தில். நாம் மனிதர்களாக ஆகிவிட்டாலும், நாம் பூரணமான மனிதர்கள் இல்லை என்பதை பணிவுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். நம்மிடம் ஏதோ ஒன்று இல்லாமல் இருக்கிறது; இல்லையெனில் நாம் ஏன் சண்டையிடுகிறோம், ஏன் சச்சரவு ஏற்படுகிறது? நான் சொல்வது, இந்த பிரச்சனைகள் அனைத்தும் பெரும்பாலும் மனித பிரச்சனைகள்: சூழலியல் பிரச்சனை, பொருளாதார பிரச்சனை, அரசியல் பிரச்சனை ஆகும். நீங்கள் மூலத்திற்கு வாருங்கள், மனிதன்தான் இவை அனைத்தையும் செய்கிறான். அதனால் மனிதர்களுக்கு என்ன தவறு ஏற்பட்டு விட்டது? விலங்குகளைப் பொறத்த வரை சரிதான், அவை மிருகங்கள்; அவை உயர்வானவரின், கடவுளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. ஆனால் மனிதர்களுக்கு சுதந்திரம் உள்ளது, அவர்கள் இங்கும் அங்குமாக அலைகிறார்கள், இந்தப் பிரச்சனைகள் எல்லாம் இருக்கின்றன, ஏனென்றால் அவர்கள் உண்மையான அறிவைப் பெறவில்லை.
அப்படியானால் நாம் தேட வேண்டிய உண்மையான அறிவு எது, அதை நோக்கி நாம் செல்ல வேண்டும். எனவே வேதங்களில் உள்ளதை இந்த மக்கள் புரிந்து கொள்ள முயன்றனர், ஆனால் அவர்கள் இயற்கையையும் ஐந்து மூலகங்களையும் பற்றி புரிந்து கொள்ள அதிக முயற்சி எடுத்தனர். ஐந்து மூலகங்களை வணங்கும்போது, நம்முடைய கூற்றுப்படி அவர்கள் வலது பக்கம் சென்றுவிட்டனர், மேலும் வலது பக்க இயக்கம் கிரேக்க புராணங்களில் நன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது; அதன் பிறகு கிரீஸிலிருந்து அது ஏதோ ஒரு விஞ்ஞானமாக மாறியது, இந்த விஷயங்கள் அனைத்தும் ஆரம்பித்தன. இடது பக்கம் என்பது பக்தி. மக்கள் கடவுளை குருட்டு நம்பிக்கையுடன் வழிபடத் தொடங்கினர், மேலும் கடவுளைத் தேடி கோயில்களுக்கும் தேவாலயங்களுக்கும் சென்று, வழிபட்டார்கள், புனிதர்களை நம்பினார்கள். குறிப்பாக இந்தியா விசேஷமாக ஆசீர்வதிக்கப்பட்டது, ஏனென்றால் எங்களிடம் உள்ள அனைத்தும் புனிதர்களிடமிருந்து வந்தவையே, இருப்பினும் அது மிகவும் மாறுபட்டும், மிகவும் தேக்கநிலையிலும் உள்ளது. ஆனால் இந்த அறிவு ஞானிகளிடமிருந்தும், மகரிஷிகளிடமிருந்தும், உயரிய பார்ப்பனர்களிடமிருந்தும் வந்தது. இந்தியர்களைப் பற்றிய மற்றொரு நல்ல விஷயம் என்னவென்றால், அவர்களின் மதம் ஒழுங்கமைக்கப்படாதது, அதை நடத்தும் அமைப்பு என்று எதுவும் கிடையாது. அது ஒரு மிகப் பெரிய ஆசீர்வாதம். இருந்தபோதிலும், வேதங்களில் உள்ள இந்த சித்தாந்தங்கள் அனைத்தும் ஒருவித மன மாயைக்குள் சென்றுவிட்டன, அப்படித்தான் ஆர்ய சமாஜம் போன்ற அமைப்புகள் வந்தன மற்றும் அவை அனைத்தும் மிகவும் கடினமானவை.
அதாவது, நீங்கள் எந்த ஒரு ஆர்ய சமாஜியையும் சந்தித்தால் அந்த நபரை எப்படி கையாள்வது என்று தெரியாது; பேச்சு, பேச்சு என்று போய்க் கொண்டே இருக்கும் - கடவுளுக்குத்தான் தெரியும், அவருடையது அத்தகைய அறிவு. ஆனால் அவர் எந்த விஷயத்தையும் அடையவில்லை, மேலும் அவர் படிப்பதில் மட்டுமே திருப்தி அடைகிறார், எல்லா நேரத்திலும் அதிகமாகப் படிக்கிறார். அதைத்தான் கபீரா சொன்னார், “படி படி பண்டித முர்க் பயோ” – “அதிகமாக படிப்பதால், பண்டிதர்கள் கூட முட்டாள்களாகிவிடுவார்கள். நான் ஆச்சரியப்பட்டேன், அது எப்படி இருக்கும்? ஆனால் இப்போது நான் அந்த வகையானவர்கள் பலரை சந்திக்கிறேன். எனவே விஷயம் என்னவென்றால், படிப்பதன் மூலம் நீங்கள் இறுதியானதை அறிய முடியாது என்பதுதான். உதாரணமாக ஒரு மருத்துவர் இருக்கிறார், அவர் உங்களுக்கு தலைவலிக்கு மருந்து கொடுக்கிறார், மேலும் அனாசின் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். நீங்கள் மருந்துச் சீட்டை வெறமனே படிக்கிறீர்கள், "அனாசின், அனாசின் எடுக்க வேண்டும், அனாசின் எடுக்க வேண்டும்" என்று, தலைவலி அதிகரிக்குமா அல்லது குறையுமா? நீங்கள் மருந்தை சாப்பிட வேண்டும். மேலும் இதுவே வேதங்களில் எழுதப்பட்டுள்ளது, அதாவது நீங்கள் உங்கள் ஆத்மாவைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று.
அதேபோல், வேதங்களின் ஒரு பகுதியான உபநிடதங்களிலும்; உபநிடதங்கள் முழுவதும் "உன் ஆத்மாவை நீ கண்டுகொள்" என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர வேறொன்றுமில்லை. நீங்கள் "பதஞ்சலி சாஸ்திரம்”ல் பார்த்தால் கூட, ஆரம்பத்தில் மட்டும் சிறிய அளவில் வியாயமா பற்றி சொல்லப்பட்டிருக்கும், அதாவது, அஷ்டாங்கங்கள் பற்றி குறிப்படப்பட்டிருக்கும். அதில் மிக சிறிய அளவில் மட்டுமே உடல் ரீதியான பிரச்சனை என்று சொல்லப்படுவதை அவர்கள் கையாண்டிருப்பார்கள். சஹஜ யோகாவிலும் நாம் அதைப் பயன்படுத்துகிறோம், ஆனால் பிரச்சனை எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு; எல்லோரும் உடற்பயிற்சிகள் மற்றும் அது போன்ற விஷயங்களில் ஈடுபடுவது போல் அல்ல, மாரடைப்பு ஏற்படும் அளவுக்கோ அனைத்து வகையான பிரச்சனைகள் வரும் அளவுக்கோ, வெப்பம், உயர் இரத்த அழுத்தம் வரும் அளவுக்கோ அல்ல. சில சமயங்களில் குறைந்த ரத்த அழுத்தம், சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும், அவர்கள் என்னிடம் வந்து, “அம்மா, நாங்கள் யோகா செய்கிறோம், பாருங்கள்...” என்று சொல்வார்கள். நாம் இந்த உடல் மட்டுமல்ல, நாம் இந்த மனம் மட்டும் அல்ல, இந்த உணர்வு மட்டும் அல்ல, ஆனால் நாம் ஆன்மீக ஜீவன்கள். இந்த நாட்டில் நாம் கொண்டிருந்த இரண்டாவது வகை இயக்கம் பக்தி ஆகும். பக்தி என்பது சரிதான், கோவிலுக்குப் போவது என்பது சரிதான், ஆனால் அதுவும் குறைய ஆரம்பித்து விட்டது, பக்தி என்றால் என்னவென்று புரிந்து கொள்ளாமல் செல்கிறோம். ஸ்ரீ கிருஷ்ணர் தனது கீதையில் கூறியுள்ளார், ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு ராஜதந்திரி என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், அவர் ஒரு தாய் அல்ல, மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அவருக்குத் தெரியும். உண்மையைக் கண்டறிய அவர்கள் அலைந்து திரிய வேண்டும் என்று அவர் விரும்பினார், ஏனென்றால், நேரடியான கூற்றை யாரும் விரும்புவதில்லை.
அந்த காலத்தில் குறிப்பாக அவர் அதை அர்ஜுனனிடம் மட்டும் சொன்னார். அவர் அவர்களுக்காக மூன்று விஷயங்களைக் கூறினார், அதில் அவருடைய ராஜதந்திரத்தைப் பாருங்கள், நீங்கள் அவர் சொல்வதை உணர அல்லது புரிந்து கொள்வதற்கு, முதலாவதாக நீங்கள் ஞானத்தைப் பெற வேண்டும் என்று கூறினார். அவர் ஒரு நல்ல விற்பனையாளர் இல்லை, ஏனென்றால் ஒரு விற்பனையாளராக இருப்பவர் உங்களுக்கு நல்ல விஷயத்தை முதலில் சொல்லியிருக்க மாட்டார், ஆனால் நீங்கள் ஞானத்தை அடைய வேண்டும் என்று அவர் கூறினார். அதுதான் உண்மை. "ஞானம்" என்பது உங்கள் மத்திய நரம்பு மண்டலத்தின் இந்த அறிவைக் குறிக்கிறது. ஆனால் அவர் சொன்ன இரண்டாவது விஷயம், உங்களிடத்தில் பக்தி இருக்க வேண்டும், "நீங்கள் எனக்கு எந்த பழம் அல்லது பூ அல்லது தண்ணீர் எது கொடுத்தாலும், நான் அதை எடுத்துக்கொள்வேன். ஆனால் உங்களிடத்தில் அனன்ய பக்தி இருக்க வேண்டும்." இப்போது உங்களுக்கு சமஸ்கிருதம் தெரிந்திருந்தால், "அனன்ய" – என்பது நீங்கள் மற்றவராக இல்லாதபோது, நீங்கள் விழிப்புணர்வு பெற்ற ஆத்மாவாக இருக்கும்போது வரும் பக்தி என்பது புரியும். நீங்கள் இணைக்கப்படவில்லை என்றால், உங்களின் பக்தியால் என்ன ஆகப் போகிறது? பலர் புகார் கூறுகிறார்கள், “அம்மா நான் விரதம் இருந்தேன், நான் இதைச் செய்தேன், அதைச் செய்தேன், என் நிலையைப் பாருங்கள்.
எனக்கு நரம்புச் சிதைவு வந்து விட்டது”. அது கடவுளின் தவறல்ல; நீங்கள் இன்னும் இணைக்கப்படவில்லை என்பதுதான் விஷயம். இதை எளிமையாக ஒரு தொலைபேசியை உதாரணமாக கொண்டு சொல்லலாம். தொலைபேசி இணைக்கப்படவில்லை என்றால், தொலைபேசியில் பேசுவதால் என்ன பயன்? நீங்கள் தொலைபேசியைக் கெடுத்துவிடுவீர்கள். எனவே இணைப்பில்லாத பக்தி தவறு, அதனால்தான் கிருஷ்ணர் இப்படிக் கூறினார், "யோக க்ஷேம வஹாம்யஹம்" - "முதலில் யோகம், பிறகு க்ஷேமம்". முதலில் நீங்கள் உங்கள் யோகத்தை அடைய வேண்டும், பின்னர் உங்கள் க்ஷேமம்-நன்மை வரும்; இல்லையெனில் அது செயல்படாது. மிக நுட்பமாக யோகாவை முதன்மைப்படுத்தியிருப்பார். அவர் ஏன் "க்ஷேமா - யோகம்" என்று சொல்லவில்லை? எனவே பக்திக்கு அவர் இது போன்று கூறினார்.
கர்மாவிற்கு அவர் கூறியது, "எல்லா வேலைகளையும் செய்யுங்கள், மற்றும் அதை எல்லாம் வல்ல கடவுளின் தாமரை பாதத்தில் வைக்கவும்". அது சாத்தியமில்லை. பலர் சொல்கிறார்கள், "அம்மா, என் வேலைகளை எல்லாம் கடவுளின் தாமரை பாதத்தில் வைத்துவிட்டேன்" - நான் நினைக்கிறேன் கொலைகளைக் கூட, அது ஒரு மன எண்ணம் மட்டுமே, அதாவது, "நான் கடவுளின் தாமரை பாதத்தில் வைக்கிறேன்." என்று கூறுவது. உங்களால் முடியாது, ஏனென்றால் நீங்கள் அந்த நிலையில் இல்லை. ஆனால் உதாரணமாக ஒரு சஹஜ யோகி, "நான் குண்டலினியை உயர்த்துகிறேன்" என்று என்னிடம் சொல்ல மாட்டார். அவர் "அம்மா, அது மேலே எழும்பவில்லை, மேலே எழும்பவில்லை, என்றுதான் சொல்லுவார். அவரது பேச்சு மூன்றாம் வேற்றுமையாக இருக்கும். "இது அந்தப் பக்கம் போகாது" என்று சொல்வார். மூன்றாம் வேற்றுமையில், ஏனென்றால் அங்கு அவர் இல்லை.
எனவே இதுவே கர்மாவாகும், தானாகவே எல்லாம் வல்ல இறைவனின் தாமரை பாதத்தில் சென்றுவிடும். நல்லது, அவர்தான் எல்லாவற்றையும் செய்கிறார். நாம் வெறும் கருவிகள்தான். உதாரணமாக இந்தக் கருவி "நான் பேசுகிறேன்" என்று சொன்னால், நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். அதே போல, “நான் என் கையை வைத்தேன்...” என்று நாம் சொல்லும்போது, அது அவர்கள் தன் மீது ஒரு சுமையை எடுத்துக் கொண்டு பின் கடவுளின் தாமரை பாதத்தில் வைப்பது போல ஆகும்- அப்படி இல்லை. இது தானாக நடக்க வேண்டும், அது தன்னிச்சையானது. அதுதான் சஹஜ், உங்களுடன் பிறந்தது. நீங்கள் அனைவரும் உங்களுக்குள் அந்த சக்தியைப் பெற்றிருக்கிறீர்கள். இப்போது சில புத்தகங்கள் உள்ளன, அதில் குண்டலினி என்பது மிகவும் ஆபத்தான விஷயம் என்று விவரிக்கப்பட்டுள்ளது. நான் சொல்கிறேன் அது முற்றிலும் முட்டாள்தனம்.
நான் பல தேசங்களுக்குச் சென்றிருக்கிறேன், பல மக்கள் விழிப்புணர்வைப் பெற்றிருக்கிறார்கள், அவர்களுக்கு ஒரு சிறு பிரச்சனைகூட ஏற்பட்டதில்லை. மாறாக, எல்லா வகையிலும் முன்னேற்றம்தான் கண்டுள்ளனர். ஒரே இரவில் மக்கள் தங்கள் போதைப் பழக்கங்களையும், அவர்களின் கெட்ட பழக்கங்களையும், கைவிட்டார்கள். ஒரே இரவில் மக்கள் குணமடைந்துள்ளனர். அது போன்று எதுவும் நான் செய்வதில்லை. நான் ஏதோ செய்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம் - நான் செய்வதில்லை, உங்கள் சொந்த குண்டலினிதான் அதைச் செய்கிறது. உங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும் அது எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு எப்படி அது உதவுகிறது என்பது; ஏனென்றால் அவள் உங்கள் தாய், உங்கள் தனிப்பட்ட தாய், உங்களைப் பற்றி அவளுக்கு எல்லாம் தெரியும். இது அனைத்தும் அவளுக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சொல்லலாம். மூன்றரை சுருள்களாக உங்களுக்குள் வைக்கப்பட்டுள்ளாள். ஏனென்றால் அது சில கணித சூத்திரம் - அவள் எழும்பும்போது, அவள் சிறிது வெப்பத்தை வெளிவிடலாம், ஏனென்றால் அது ஒரு சிறிய, போராட்டம் செய்ய வேண்டியிருந்ததால் என்று சொல்லலாம்.
சிலருக்கு சில நேரங்களில் வெப்பம் சிறிதாக உருவாகும். உதாரணமாக நீங்கள் கல்லீரல் நோயாளி என்று வைத்துக்கொள்வோம், பின்னர் உங்கள் கைகளில் கொஞ்சம் வெப்பத்தை உணரலாம், அவ்வளவுதான். ஆனால் இந்த குண்டலினியை நீங்கள் அனைவரும் பெற்றுள்ளீர்கள், அது உங்களுக்குள் இருக்கும் தூய விருப்பம். உங்களுக்குத் தெரியும், பொருளாதாரத்தில் ஒரு விதி உண்டு, பொதுவாக விருப்பங்கள் எப்போதும் தெவிட்டுவது இல்லை என்று. இன்று நமக்கு ஒரு வீடு வேண்டும், நாளை ஒரு கார் வேண்டும், பின்னர் நாளை மறுநாள் ஒரு ஹெலிகாப்டர் வேண்டும், அதுபோல் விருப்பங்கள் நீண்டு கொண்டே செல்லும். நம்மிடம் அது இல்லாதபோது நாம் அதற்காகப் போராடுவோம், அது இருக்கும்போது நாம் அதை அனுபவிப்பதில்லை. ஆனால் இது ஒரு தூய விருப்பம், அதாவது இந்த எங்கும் வியாபித்திருக்கும் கடவுளின் அன்பு சக்தியுடன் ஒன்றாக இணைய வேண்டும் என்பது. அப்படியொரு சக்தி இருப்பதாக நாம் நினைத்துகூட பார்த்ததில்லை, அதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். உருவாக்கப்பட்ட அனைத்தையும் பார்க்கிறோம், அழகான பூக்களைப் பார்க்கிறோம், சிறிய சிறிய விதையிலிருந்து பெரிய மரம் வெளிவருவதைக் காண்கிறோம். நம் கண்களைப் பாருங்கள், அவை எப்படிப்பட்ட அழகான கேமராக்கள் - அவற்றை உருவாக்கியது யார்?
யார் நம்மை இந்த நிலைக்கு பரிணமிக்க வைத்தது? நம்மை மனிதர்களாக்கிய அந்த சக்தி எது? நாம் ஒருபோதும் அதனை கண்டுபிடிக்க விரும்பியதில்லை, ஏனெனில் விஞ்ஞானத்தால் எப்படி எனும் கேள்விக்கு விளக்கமளிக்க முடியாது: ஒரு விதை எப்படி முளைக்கிறது, நாம் எப்படி மனிதர்கள் ஆனோம் போன்றவற்றிற்கு. மேலும் ஒரு எல்லை வரைக்கும் எல்லாம் சரிதான், அதற்கும் அப்பால் இருப்பதை நாம் தெரிந்து கொள்ள விரும்பியதில்லை. எனவே எல்லாம் வல்ல கடவுள் இந்த அழகான சைதன்யத்தை, இந்த பிரம்மசைதன்யத்தை எங்கும் பரப்பியுள்ளார். நான் அப்படிச் சொல்கிறேன் என்றால், அது இருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் அனுபவித்துவிட்டுச் சொல்லுங்கள். ஆனால் வெறுமனே "இல்லை" என்று சொன்னால், அதன் அர்த்தம் அந்த உயர் நிலை சக்தியுடன் இணைவதற்கான வாய்ப்பை நீங்கள் மறுக்கிறீர்கள் என்பதுதான். இந்த உயர் நிலை சக்திதான் நம்மை பரிணமிக்க வைத்துள்ளது சந்தேகமில்லை: அது ஒவ்வொன்றையும் ஒழுங்கமைக்கிறது, ஒவ்வொன்றையும் உருவாக்குகிறது, ஒவ்வொன்றையும் அதிர்வுறச் செய்கிறது. அது ஒருங்கிணைக்கிறது, வரம்புக்குள் கொண்டு வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அது உங்கள் மீது அன்பு காட்டுகிறது.
அதனால் உங்களுடன் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்று அது சிந்திக்கிறது. அத்தகைய ஒரு அழகான சக்தி எங்கும் வியாபித்துள்ளது, ஒவ்வொரு அணுவிற்குள்ளும், ஒவ்வொரு உயிருள்ள தாவரத்தின் தண்டுக்குள்ளும், ஒவ்வொரு உயிருள்ள ஜீவனுக்குள்ளும். அந்த அளவுக்கு அது அழகாகச் செயல்படுகிறது, அதன் மென்மையைக்கூட நாம் உணர்வதில்லை. ஒரு பூ பூப்பதை, நாம் பார்ப்பதில்லை, பூ மலருவதையும், திறப்பதையும் கூட நாம் பார்ப்பதில்லை. அது மலர்கிறது அவ்வளவுதான், நாம் "ஓ, இன்று ஒரு பூ பூத்திருக்கிறது" என்று மட்டும் சொல்வோம். அது அவ்வளவு இனிமையாகவும், அழகாகவும் இருக்கிறது, எந்த வகையிலும் அதன் இருப்பை நாம் உணர்ந்ததில்லை - ஆனால் அது அங்கே உள்ளது. அந்த சக்தியுடன் நாம் இணைக்கப்படும் வரை, இறுதி யதார்த்தத்தை நாம் அறிய முடியாது, ஏனென்றால் நமக்குள் இருக்கும் ஆத்மா நம் கவனத்தில் இல்லை. அதுவே நம் கவனத்திற்கு சாட்சி. ஆனால் குண்டலினி எழுந்தவுடன், அவள் ஆறு மையங்களைக் கடந்து, இந்த உச்சிக்குழி எலும்புப் பகுதியைத் துளைக்கிறாள், அதுவே உண்மையான ஞானஸ்நானம் ஆகும், பின்னர் இந்த ஆத்மா ஒரு ஒளியாக நம் கவனத்திற்கு வருகிறது. மேலும் நமது நரம்புகள் ஒரு புதிய பரிமாணத்தைப் பெறுகின்றன, அந்த புதிய பரிமாணத்தின் மூலம் நாம் அதுவாக ஆகிறோம், அதுவாக ஆகிறோம், மீண்டும் சொல்கிறேன் நாம் அதுவாக ஆகிறோம், இது வெறும் சொற்பொழிவு மட்டுமல்ல, இது வெறும் தற்பெருமை பேசுவதல்ல, இது ஒருவிதமான சான்றிதழல்ல- நீங்கள் உண்மையில் கூட்டுணர்வாக ஆகிறீர்கள்: சாமுஹிக் சேதனா.
நீங்கள் மற்றவர்களை உணர முடியும். உங்கள் விரல் நுனியில் நீங்கள் உணரலாம் - இடதுபுறத்தில் ஐந்து சக்கரங்களும், ஆறாவது மற்றும் ஏழாவது சக்கரங்களும் உள்ளன, மற்றும் வலதுபுறத்தில் ஏழு சக்கரங்களும் உள்ளன. இந்த ஏழு சக்கரங்களும் உங்கள் உணர்வுப் பக்கத்தையும், மற்றும் இது உடல் மற்றும் மனப் பக்கத்தையும் குறிக்கின்றன. எல்லா மக்களின் சக்கரங்களையும் நீங்கள் உணரலாம். மருத்துவ ரீதியாக நாம் மக்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது, நாம் மரத்திற்கு வெளியில் இருந்து சிகிச்சை அளிக்கிறோம், இலைகளுக்கு சிகிச்சை அளிக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நீங்கள் உண்மையில் மரத்திற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால், நீங்கள் செல்ல வேண்டியது வேர்களுக்கு. மேலும் நான் சொல்வது நமக்குள் இருக்கும் வேர்களைப் பற்றி, நமக்குள் இருக்கும் வாழ்க்கை மரத்தைப் பற்றி. உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும், முகமது சாஹிப் கூட கியாமா பற்றி விவரித்திருக்கிறார் - "கியாமா" என்றால் உயிர்த்தெழுதல் நேரம். "உயிர்த்தெழுதல் காலம் வரும்போது, உங்கள் கைகள் பேசும், அவை உங்களுக்கு எதிராக சாட்சி கூறும். அவர்கள் அனைவரும் இந்த நேரத்தைப் பற்றி, கடைசி தீர்ப்பைப் பற்றிப் பேசியுள்ளார்கள், மேலும் இந்த கலியுகத்தைத் தொடர்ந்து சத்ய யுகம் வரப் போகிறது என்று பேசினார்கள்.
ஆனால் அதை ஏற்க எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் விஷயம். ஆயிரக்கணக்கான பேர் ஒருவிதமான பித்து பிடிக்க வைக்கும், பைத்தியக்காரத்தனமான இடத்திற்குச் செல்வார்கள், ஆனால் உண்மைக்குப் பின்னால் செல்ல மாட்டார்கள். அதைப் புரிந்து கொள்வதற்கு உங்களுக்கு ஒரு வகையான தெய்வீக அறிவு தேவை என்று நான் நினைக்கிறேன். நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், ரஷ்யா இதனை மிகவும் ஏற்றுக்கொள்ளும் நாடாக நான் காண்கிறேன், ஏனென்றால் அவர்கள் அந்தளவு பொருள் சார்ந்தவர்கள் அல்ல. அவர்களுக்கு இந்த வகையான சுதந்திரம் அல்லது எதுவும் இல்லை, ஆனால் உள்ளுக்குள் செல்ல அவர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. அதிகமாக சுயபரிசோதனை செய்து கொள்பவர்கள், அவர்களின் எழுத்தாளர்கள் கூட, நான் எப்போதும் அவற்றைப் படிப்பேன், டால்ஸ்டாய் மற்றும் போன்ற அனைத்தையும். அவர்கள் அனைவரும் அதிகம் சுய பரிசோதனை செய்து கொள்பவர்கள், நாங்கள் அதற்காக எப்போதும் ஒரு பெரிய மைதானத்தை ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும், அப்படியும் இன்னும் நிறைய பேர் வெளியில் அமர்ந்திருப்பார்கள். டோக்லியாட்டி என்று அழைக்கப்படும் ஒரு இடத்தில் குறைந்தது 22,000 சஹஜ யோகிகள் வந்திருந்தனர். நான் அங்கு இருந்தபோது, இந்த ஆட்சிக்கவிழ்ப்பு நடந்ததால், அவர்களிடம் “உங்களுக்குத் தொந்தரவு இல்லையா?” என்று கேட்டேன். அவர் சொன்னார் “அம்மா, இதில் கலங்குவதற்கு என்ன இருக்கிறது?
நாங்கள் கடவுளின் ராஜ்யத்தில் இருக்கிறோம், நாங்கள் இந்த ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல." இது போன்ற நல்ல விஷயங்கள் உலகம் முழுவதும் நடக்கின்றன. இந்தியர்களாகிய எங்ளுக்கு வேறு சில பிரச்சனைகள் உள்ளன, அவர்கள் மிகவும் நிபந்தனைக்குட்பட்டவர்கள். நமக்கு முன்னால் அத்தகைய இலட்சியங்கள் உள்ளன, ஆனால் நாம் ஒருபோதும் ஆசைப்படுவதில்லை. நாம் ராமரை வணங்குகிறோம், நாம் ஒரு குருவை வணங்குகிறோம், ஆனால் நீங்கள் உங்களுக்குள் என்ன அடைந்தீர்கள்? நீங்கள் சிலவற்றில் ஒட்டிக்கொண்டிருக்கிறீர்கள்; உங்களிடம் இருக்கும் ஒன்று பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அதுதான் சஹஜ யோகம். உங்களை நீங்கள் அறியாத வரை, நீங்கள் ஸ்ரீ ராமரை அறிய மாட்டீர்கள், நீங்கள் யாரையும் அறிய மாட்டீர்கள். ஒரு நாள் சஹஜ யோகத்தைப் பற்றி ஒரு பைத்தியக்காரன் எழுதிய புத்தகத்தைப் பார்த்தேன். அவர் கிருஷ்ணரின் இருப்பை மறுக்கிறார், அவர் ராமர் இருப்பதை மறுக்கிறார், இயேசுவின் இருப்பை மறுக்கிறார், ஒவ்வொருவரையும் மறுக்கிறார்.
நான் சொல்கிறேன், அவன் அப்படிப்பட்ட ஒரு பைத்தியக்காரன், இது மிகவும் அறிவியலற்றது; எதையும் கண்டுபிடிக்காமல், எப்படிச் சொல்ல முடியும்? கண்டு பிடிக்காமல் வெறுமனே அது போன்று எப்படிச் சொல்ல முடியும். உதாரணமாக நான் மெட்ராஸுக்கு வந்ததே இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள், நான் மெட்ராஸைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தால், நீங்கள் என்னை என்னவென்று அழைப்பீர்கள்? அதுபோலவே பலர் கடவுளைப் பற்றி எழுதுகிறார்கள். ஏனென்றால் எழுதக்கூடாது என்பதற்கு எந்த தடையும் இல்லை என்பதால், எந்த முட்டாள்தனத்தையும் எழுதலாம். ஆனால், உண்மையை அடையாத வரை, யார் போலி குரு, யார் இல்லை என்று நமக்குத் தெரியாது. நீங்கள் என்னிடம் கேட்கலாம், "அம்மா, இவர் ஒரு போலி குருவா, அவர் ஒரு போலி குருவா?". நான் சொல்கிறேன், நீங்கள் என்னை ஏன் நம்ப வேண்டும்?. அவர் உண்மையான குரு இல்லை என்று நான் சொன்னால், நீங்கள் என்னுடன் சண்டையிடத் தொடங்குவீர்கள். அவர் உண்மையான குரு என்று நான் சொன்னால், நீங்கள் என்னை நம்புவீர்கள்.
அந்த மாதிரியான விஷயம் தேவையில்லாதது. நீங்களாகவே அதைத் தெரிந்து கொள்ளலாம், அதன் மூலம் நீங்களாகவே முழுமையான உண்மையை அறிந்து கொள்ளலாம். ஏனென்றால் உங்கள் ஆத்மா முழுமையானது. அது முழுமையான உண்மையைத் தரும். நாளை நான் உங்களுக்கு ஆத்மா பற்றி மேலும் கூறுகிறேன். இன்றைக்கு இது போதுமானது என்று நினைக்கிறேன். நாம் அதனை .. நான் நினைக்கிறேன், நீங்கள் விரும்பினால், ஆத்ம-விழிப்புணர்வுக்கான அமர்வை நாங்கள் நடத்துகிறோம். அதற்கு அதிக நேரம் எடுக்காது. முதலில் நீங்கள் தயாராக இருக்க வேண்டும், அதைக் கேட்க வேண்டும் அவ்வளவுதான், உங்கள் அனைவருக்கும் அது கிடைக்கும். நிச்சயமாக உங்கள் தலையில் பல கேள்விகள் இருக்கும்.
கடந்த முறை நான் மெட்ராஸ் வந்தபோது, முழு நேரமும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதில்தான் கழிந்தது. கேள்விகள், கேள்விகள், கேள்விகள். ஆனால் இப்போது உங்களிடம் கேட்டுக் கொள்வது, உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், அவற்றை ஓரமாக வைக்கவும், நீங்கள் அவற்றை எழுதி வைத்துக் கொள்ளலாம். நாளை உங்கள் எல்லா கேள்விகளுக்கும் நான் பதிலளிப்பேன், ஆனால் இப்போது தயவு செய்து, முடிந்தால் உங்கள் விழிப்புணர்வைப் பெற முயற்சிக்கவும். மிக்க நன்றி. நீங்கள் வெளியே செல்ல விரும்பினால் ஐந்து நிமிடங்களில் - நீங்கள் அனைவரும் சென்று திரும்பி வரலாம், பரவாயில்லை - ஆனால் ஒருவருக்கொருவர் பேச வேண்டாம், அவ்வளவுதான். நம் நாட்டில் இருந்த மூன்றாவது வகையான நாத்பந்திஸ் இயக்கத்தைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்லவில்லை. ஜைனர்களிடத்தில் ஆதிநாத் என்று ஒருவர் இருந்தார், அதிலிருந்து ஒரு விலகல் தொடங்கியது. ஒரு குரு ஒருவருக்கு மட்டுமே ஞானத்தைக் கொடுக்க வேண்டும்- ஜனகருக்கு நச்சிகேதா மட்டும் இருந்ததைப் போல - ஞானேஸ்வரரின் காலம் வரை, அது நடந்தது பன்னிரண்டாம் நூற்றாண்டில் [அதாவது 1200களில்]. ஞானேஸ்வரா தனது சொந்த சகோதரரான நிவ்ரிதிநாத்தின் சீடராக இருந்தார், மேலும் அவர்கள் மிகவும் துன்பப்பட்டார்கள்.
அவர் நிவ்ரிதிநாத்திடம் ஒரு அனுமதி கேட்டார், அதாவது, "பொதுமக்களுக்கு உண்மையைப் பற்றிச் சொல்ல அனுமதிக்க வேண்டும், நான் அதைப் பற்றி சொல்லப் போகிறேன், நான் வேறு எதுவும் செய்ய மாட்டேன், அதைப் பற்றி நான் சொல்ல மட்டும் செய்கிறேன்." ஏனெனில், பதின்மூன்று, பதினான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மார்க்கண்டேயர் குண்டலினி பற்றி விவரித்துள்ளார். பின்னர் வந்த ஆதி சங்கராச்சாரியாரும் குண்டலினி பற்றி விவரித்துள்ளார், ஆனால் அனைத்தும் சமஸ்கிருத மொழியில் இருக்கிறது. மேலும் சமஸ்கிருதம் பற்றிய சுய அறிவு பொது மக்களிடத்தில் இல்லை, மேலும் சமஸ்கிருத மொழியை அறிந்தவர்கள் ஆத்ம அறிவைப் பெற விரும்பவில்லை. இதனால் இந்த அறிவு எப்போதும் ரகசியமாக வைக்கப்பட்டது. ஆனால் அவரிடம் இவர் கேட்டார், பின்னர் இவர் "ஞானேஸ்வரி"யை எழுதினார். "ஞானேஸ்வரி" என்பது ஒரு வகையில் மராத்தி "கீதை" யே தவிர வேறல்ல, அதை அவர் நிறைய கவிதைகளால் விரிவாக அலங்கரித்தார். "ஞானேஸ்வரி"யின் ஆறாவது அத்தியாயத்தில் குண்டலினி பற்றி மிக தெளிவாக விவரித்துள்ளார். மேலும் அந்த ஆறாவது அத்தியாயமும் சிதைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது “நிஷிதா“ (தடை செய்யப்பட்டது) என்று அழைக்கப்பட்டது, அதாவது அதை படிக்கக்கூடாது என்று, மதத்தின் பொறுப்பாளர்கள், நமது ஏற்றத்திற்கு பொறுப்பானவர்கள் என்று அழைக்கப்படுபவர்களால் சொல்லப்பட்டது.
அவர்கள் கூறினார்கள், "இதை நீங்கள் படிக்க கூடாது, அப்படி படித்தால் நீங்கள் சிரமப்படுவீர்கள்". அதனால் இந்த அத்தியாயம் மறைக்கப்பட்டது, அதைப் பற்றி, யாரும் தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. ஆனால் நாத்பந்திகள் பின்னர் வளர்ந்தனர். அதில் இருந்து நமக்கு கபீரா கிடைத்தார், நானகா கிடைத்தார். அவர் “காலிஸ்”களைப் பற்றிப் பேசினார், நானகா காலிஸ்களைப் பற்றி பேசினார். “காலிஸ்” என்றால் தூய்மையான, நிர்மல் என்று அர்த்தம். சஹஜ யோகிகள் நிர்மலமானவர்கள். யாராவது எதையும் தவறாகப் பயன்படுத்தினால், அது தெளிவாகத் தெரியும்; மேலும் ஒரு துறவி அப்படி இருக்க கூடாது. காலிஸ் மக்கள் அப்படி இருக்க முடியாது, வன்முறையாளர்களாக இருக்க முடியாது. அதுவே அன்பு.
அந்த அன்பு முற்றிலும் நிர்வாஜ், அது எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது. அந்த அன்பு எல்லையற்றது. அந்த அன்பு எந்த பாகுபாடும் இல்லாதது. உதாரணமாக, தாவரத்தில் உள்ள ஆற்றல் உயர்வது போல் அல்லது சாறு உயர்வது போல் என்று சொல்லலாம், அது பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும்: அதே நேரத்தில் இலைகளுக்கு,கிளைகளுக்கு, பூக்களுக்கு, பழங்களுக்கு சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வரும். அது எதனோடும் ஒட்டிக் கொள்ளாது. ஏதாவது ஒன்றில் ஒட்டிக்கொண்டால், அதுவே அந்த பாகத்தின் மரணம் ஆகும், அதே நேரத்தில் அந்த மரத்தின் மரணமாகவும் ஆகிறது. ஆகவே நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், இந்த பூமிக்கு வந்த மாபெரும் அவதாரங்கள், ஞானிகள், தீர்க்கதரிசிகள் அனைவரும் இந்த ஒரே ஜீவ மரத்திலிருந்து வந்தவர்களே. அவர்கள் அனைவரையும் நீங்கள் நம்ப வேண்டும். நீங்கள் அவர்களை நம்ப ஆரம்பித்துவிட்டால், அவர்கள் அனைவரையும், பின்னர் சண்டை எப்படி நடக்கும்? ஆனால் ஒருவரை மட்டுமே நம்புபவர்கள் சண்டையிட்டுக் கொள்ளத்தான் செய்வார்கள், அதனால்தான் அவர்கள் நம்மை விரும்புவதில்லை, ஏனென்றால் நாம் அனைவரையும் நம்புகிறோம் – அது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, ஆனால் அதுதான் உண்மை.
இப்போது இங்கே நான் உங்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும், இதுவே பரிணாமத்தின் ஒரு உயிருள்ள செயல்முறை, கடைசி திருப்புமுனை. மனிதர்களாக மாற நீங்கள் எதையும் செய்ததில்லை; அதே வகையில் அது பிரயத்தனமற்றது, அது சஹஜ். நான் உங்களுக்குச் சொல்லும் ஒரே விஷயம், உங்கள் சக்கரங்களுக்கு எப்படி ஊட்டமளிப்பது, அதனால் குண்டலினி எளிதாக எழுந்து உயர முடியும் என்பதைத்தான். இது மிகவும் எளிமையானது, நீங்கள் அனைவரும் செய்ய வேண்டும். இப்போது, நீங்கள் மற்றவர்களைப் பார்க்க வேண்டியதில்லை, ஆனால் உங்களைப் பாருங்கள். நீங்கள் உங்கள் காலணிகளை கழட்டிவிட வேண்டும், அது ஒரு நல்ல யோசனையாக இருக்கும், ஏனென்றால் - அன்னை பூமியை உணர்வதற்காக. ஏனென்றால் அவள் நம் பிரச்சனைகளை எல்லாம் உறிஞ்சுகிறாள், எல்லா நேரங்களிலும், குறிப்பாக நம்முடைய இந்த யோக பூமியில். நாம் இந்த நாட்டில் பிறந்ததனால் நாம் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்பது நமக்குத் தெரியவில்லை. அவர்கள் அதை குழப்பிவிட்டார்கள், பரவாயில்லை. ராமராஜ்ஜியம் வரவேண்டும் என்றால், அது இங்கு வரும், அது அரசியல் பாணியில் அல்ல ஆன்மீக பாணியில்.
இது எல்லா நேரத்திலும் சாய்கிறது என்று நினைக்கிறேன். நீங்கள் அதை சிறிது உள்ளே தள்ளலாம் -அது கீழே சாய்கிறது. இப்போது எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைக்கிறேன், அது அப்படியே இருக்கட்டும். இப்போது நன்றாக இருக்கிறது. நன்றி. நான் சொன்னது போல் நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். நீங்கள் உங்கள் எண்ணங்களை நிறுத்த வேண்டாம், நீங்கள் எந்த பிரயத்தனமும் செய்ய வேண்டாம், எந்த மந்திரங்களையும் சொல்ல வேண்டாம், எதுவும் வேண்டாம். குண்டலினி தன் வேலையைச் செய்யும்; அவள் உன்னை நன்றாக அறிவாள், அவள் அதை நிர்வகிப்பாள். உங்கள் மீது நம்பிக்கை மட்டும் வையுங்கள், இந்த விழிப்புணர்வை நீங்கள் பெறுவீர்கள் என்ற முழு நம்பிக்கை வையுங்கள். குற்ற உணர்வு என்பது இயற்கையானதாக இல்லாத ஒன்று, நான் நினைக்கிறேன் அது சில மக்கள் நம்மிடம் இப்படி கூறுவதால் வருகிறது, அதாவது "நீங்கள் பாவிகள், நீங்கள் இப்படி, நீங்கள் அப்படி" என்று கூறுவதால்.
என் பார்வையில் யாரும் பாவி இல்லை. நீங்கள் வழி தவறிவிட்டீர்கள், நீங்கள் அறியாமையில் இருக்கிறீர்கள்,ஆனால் யாரும் பாவி இல்லை. எனவே நாம் நம்மை மதிக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நாம் மகிமையானவர்கள், நாம் அற்புதமானவர்கள். நாம் இணைப்பில் இல்லாததால், அப்படி காட்சி அளிக்கிறோம், நம்மை நாமே இகழ்கிறோம், மற்றவர்களும் உங்களை இகழ்ந்திருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு மானுட ஜென்மம், நீங்கள் பரிணாம வளர்ச்சியின் உதாரணம். இப்போது ஒரு சிறிய திருப்பம் தேவை, ஒரு இணைப்பு கிடைப்பது போல, உங்கள் ஆத்மாவை நீங்கள் அறிவீர்கள் என்று நான் நம்புகிறேன். குண்டலினியின் விழிப்புணர்வை அடைந்து, உங்கள் உச்சந்தலை எலும்புப் பகுதியில் துளையிட்ட பிறகு, உங்கள் கைகளில் குளிர்ந்த காற்றை உணரத் தொடங்குவீர்கள். அதுதான் சைதன்யம் என்பது. பைபிளில் விவரிக்கப்பட்டுள்ள பரிசுத்த ஆத்மாவின் குளிர்ந்த காற்று.
குரானில் அது ரூஹ் என்று அழைக்கப்படுகிறது. அதன் பிறகு, உங்கள் தலையிலிருந்து குளிர்ந்த காற்று வீசுவதை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள். உங்கள் தலையில் இருந்து குளிர்ந்த காற்று வெளிவரத் தொடங்கியதும், பின்னர் நீங்கள் மிகவும் நிதானமாகவும், அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்வீர்கள். அதற்குப் பிறகுதான் பலர் சிரிக்கத் தொடங்குகிறார்கள். நீங்கள் சிரிக்க வேண்டும். இந்த உலகம் உங்கள் மகிழ்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது நீங்கள் கடவுளின் ராஜ்ஜியத்தில் நுழைய வேண்டும், அது மகிழ்ச்சி மட்டுமல்ல, அது அமைதி மட்டுமல்ல, ஆனால் அது ஒரு ஆனந்தமான நிலை. நீங்கள் எதையாவது இறுக்கமாக கழுத்துக்கு அருகில் அணிந்திருந்தால், அது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினால், சிறிது சிறிதாக விடுவிப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன். உங்களால் கண்ணாடியை வெளியே எடுக்க முடிந்தால் ... பின்னர் நான் சொல்லும் போது, இப்போது இல்லை; ஏனென்றால் நீங்கள் கண்களை மூடிக்கொண்டிருக்கிறீர்கள், பிறகு நீங்கள் கண்களைத் திறக்கப் போவதில்லை. எனவே முதலில் நீங்கள் எவ்வாறு உங்களுக்கு உதவப் போகிறீர்கள் என்பதை முதலில் நாங்கள் காண்பிக்கிறோம்.
இதன் மூலம் உங்களின் சக்கரங்களையும் அறிந்து கொள்வீர்கள். இடது புறத்தில் நாம் வேலை செய்வோம். முதலாவதாக, நீங்கள் இடது கையை இப்படி என்னை நோக்கி வைக்கவும் -- உங்கள் மடியில், வசதியாக. கற்பனை செய்து பாருங்கள், நீங்கள் இமயமலைக்குச் செல்ல வேண்டியதில்லை, அதுபோன்ற எதையும் செய்ய வேண்டியதில்லை, உங்கள் நாற்காலியில் வசதியாக அமர்ந்து நீங்கள் உங்கள் விழிப்புணர்வைப் பெற வேண்டும். அது உங்கள் உரிமை. உங்கள் இடது கையை இது போன்று வைக்கவும். இப்போது வலது கையால் இடது புறத்தில் உள்ள நமது சக்கரங்களை ஊட்டமளிக்க வேண்டும். முதலில் நாம் நம் இதயத்தில் கை வைப்போம், ஏனென்றால் இங்கேதான் ஆத்மா பிரதிபலித்துள்ளது. அது சர்வவல்லமையுள்ள கடவுளின் பிரதிபலிப்பு, அதுதான் ஆத்மா. பின்னர் கீழே உங்கள் வயிற்றின் மேல் பகுதியின் இடது புறத்திற்கு கொண்டு செல்லுங்கள்.
இதுவே நமது குருவின் சக்கரம். நீங்கள் ஆத்மாவாக இருந்தால், நீங்கள் உங்கள் சொந்த குருவாக ஆகிறீர்கள், உங்களுக்கு எந்த குருவும் தேவையில்லை; உங்கள் ஆத்மா உங்களை வழிநடத்தும். பின்னர் நீங்கள் உங்கள் வயிற்றின் கீழ் பகுதியின் இடது புறத்திற்கு கொண்டு செல்லுங்கள். உங்கள் மத்திய நரம்பு மண்டலத்தின் அறிவை நீங்கள் அறிந்து கொள்வது என்பது இதுதான். இந்த மையம் உங்களுக்கு தூய அறிவை - சுத்த வித்தையை வழங்குகிறது, இது உங்கள் மைய நரம்பு மண்டலத்தில் வேலை செய்கிறது. பிறகு, உங்கள் கையை மீண்டும் மேலே இடது புறம் வயிற்றிற்கு உயர்த்தி, அதைத் அழுத்துங்கள், இது குரு கொள்கையின் சக்கரமாகும். நீங்கள் ஏதேனும் தவறான குருவிடம் சென்றிருந்தாலும் அல்லது வேறு எதுவாக இருந்தாலும் அதனை சரி செய்ய முடியும். பின்னர் உங்கள் வலது கையை உங்கள் இதயத்தின் மீது வைக்க வேண்டும். இப்போது மீண்டும் உங்கள் கையை உங்கள் கழுத்து மற்றும் தோள்பட்டை மூலையில் வைத்து, உங்கள் தலையை வலது பக்கம் திருப்ப வேண்டும். இந்த சக்கரம்தான் நீங்கள் குற்றம் செய்தவராக உணரும்போது பிடிப்புக்குள்ளாகும், நீங்கள் குற்ற உணர்ச்சியை உணரும்போது இந்த சக்கரம் பிடிப்புக்குள்ளாகும்.
அது உங்களுக்கு பல நோய்களைத் தரும் - அவற்றில் ஒன்று ரத்த அடைப்பு, மேலும் முதுகெலும்பில் ஏற்படும் அழற்சி - முதுகெலும்பு வளைந்துவிடுவது; மற்றும் உள்ளுறுப்புகளுக்களில் பல பிடிப்புகள் ஏற்படும், ஏனெனில் அவை மந்தமாகின்றன. எனவே சிறந்த விஷயமானது உங்கள் கையை சரியாக இங்கே வைத்து, உங்கள் தலையை உங்கள் வலது பக்கம் இது போல் திருப்புவது. பின்னர் தயவுசெய்து உங்கள் வலது கையை உங்கள் நெற்றியின் மேல் வைத்து, உங்கள் தலையை முடிந்தவரை குணியவும். இந்த மையத்தில்தான் நீங்கள் மன்னிக்க வேண்டும். யாரை மன்னிக்க வேண்டும் என்று சிந்திக்காமல் அனைவரையும் மன்னிக்க வேண்டும், நீங்கள் மன்னித்தாலும் அல்லது மன்னிக்காவிட்டாலும், நீங்கள் எதையும் செய்யப் போவதில்லை, இது நம் கருத்து. ஆனால் நீங்கள் மன்னிக்கவில்லை என்றால் நீங்கள் தவறான கைகளில் ஆட்டுவிக்கப்படுவீர்கள். எனவே தயவு செய்து கையை இப்படி வைக்கவும், இது மன்னிப்புக்கான சக்கரம்; நீங்கள் மன்னிக்க வேண்டிய நபர்களைப் பற்றியோ அல்லது உங்களைத் துன்புறுத்தியவர்களைப் பற்றியோ சிந்திக்காமல் இருங்கள். மிகவும் முக்கியமான சக்கரம் ஆக்ஞா சக்கரம் ஆகும், ஏனெனில் இது மிகவும் குறுகிய பாதையாகும், நீங்கள் மன்னிக்கவில்லை என்றால் அது எழாது, குண்டலினியால் கடந்து செல்ல முடியாது. வெறுமனே மன்னிக்கவும். இப்போது உங்கள் தலையின் பின்புறத்தில் வலது கையை வைத்து தலையை பின்னால் சாயுங்கள்.
இதை நாம் பின்னர் செய்வோம், நான் உங்களுக்கு சக்கரங்களைக் காட்டுகிறேன். இப்போது இங்கே இந்த பின் பக்கம், ஏனென்றால் நீங்கள் எப்போதும் குற்ற உணர்வுடன் இருப்பதால், நீங்கள் தவறு செய்ததாகவோ அல்லது எதையும் செய்ததாகவோ நினைக்கிறீர்கள். எனவே தெய்வீக சக்தியிடம் மன்னிப்பு கேட்பதே சிறந்தது, அந்த மையம் இங்கே உள்ளது. இப்போது உங்கள் கையை முழுவதுமாக நீட்டி, உங்கள் உள்ளங்கையின் மையத்தை உங்கள் குழந்தைப் பருவத்தில் மென்மையான எலும்பாக இருந்த உச்சிக்குழி எலும்புப் பகுதியின் மேல் - தாலூ மேல் இங்கே வைக்கவும். உங்கள் விரல்களை நன்றாக விரைப்பாக நீட்டிக் கொள்ளுங்கள், நீட்டுவதனால் உங்கள் உச்சந்தலையில் நல்ல அழுத்தம் கொடுக்க முடியும். உங்கள் உச்சந்தலையில் நல்ல அழுத்தம் கொடுக்கவும். இப்போது உங்கள் தலையை முடிந்தவரை கீழே வளைக்கவும். இப்போது நீங்கள் உங்கள் உச்சந்தலையை மெதுவாக அழுத்தி சுழற்றவும், ஏழு முறை கடிகார திசையில் - கடிகார திசையில். ஒரு அழுத்தத்துடன்: உங்கள் கைகளை பின்னோக்கி நகர்த்தவும், அதாவது உங்கள் விரல்களை, இல்லையெனில் அது அழுத்தம் கொடுக்காது. இப்போது, முடிந்துவிட்டது!
இப்போது, முதலில், நம்மீது நமக்கு தன்னம்பிக்கை இருக்க வேண்டும், நம் மீது மரியாதை இருக்க வேண்டும், மேலும் நம்மை நாமே நேசிக்க வேண்டும். இப்போது இடது கையை இப்படி வைத்துக் கொள்ளவும், இரண்டு கால்களையும் கொஞ்சம் விலக்கி வைக்கவும், இப்போது கண்களை மூடுங்கள். உங்கள் இதயத்தின் மீது வலது கையை வைக்கவும், தயவுசெய்து உங்கள் இதயத்தின் மீது வலது கையை வைக்கவும். இங்கேதான் ஆத்மாவின் சக்கரம் இருக்கிறது, இங்கே ஆத்மா வசிக்கிறது. உங்கள் இதயத்தில் கணினியிடம் கேட்பது போல் மூன்று முறை என்னிடம் கேள்வி கேட்கலாம். நீங்கள் என்னை "ஸ்ரீ மாதாஜி" அல்லது "அம்மா" என்று நீங்கள் விரும்பும் வகையில் அழைக்கலாம். "அம்மா, நான் ஆத்மாவா?" மூன்று முறை கேளுங்கள், "அம்மா, நான் ஆத்மாவா? ஸ்ரீ மாதாஜி, நான் ஆத்மாவா?” நீங்கள் ஆத்மாவாக இருந்தால், நீங்கள் உங்கள் குருவாக மாறுகிறீர்கள். எனவே இப்போது தயவு செய்து இடது புறத்தில் உங்கள் கையை கொண்டு சென்று, உங்கள் வயிற்றின் மேல் பகுதியில் கடினமாக அழுத்தவும்.
இப்போது இங்கே மீண்டும் ஒரு கேள்வியைக் கேளுங்கள், “அம்மா, எனது நானே சுயம் குருவா?” என்று. தயவு செய்து மூன்று முறை இதயத்தில் கேளுங்கள் முழு நம்பிக்கையுடன். “அம்மா, எனக்கு நானே சுயம் குருவா?”, நீங்கள் ஆத்மாதான், ஆனால் நீங்கள் என்னிடம் கேள்வியை மட்டும் கேளுங்கள். நான் உங்கள் சுதந்திரத்தை மதிக்கிறேன், தூய்மையான அறிவை நான் உங்கள் மீது திணிக்க முடியாது, நீங்கள் அதைக் கேட்க வேண்டும். எனவே இப்போது நீங்கள் உங்கள் வலது கையை உங்கள் அடிவயிற்றின் கீழ் பகுதியில் வைத்து, இடது புறத்தில் கடுமையாக அழுத்தவும். இப்போது இங்கே நீங்கள் சொல்ல வேண்டும், “அம்மா, தயவு செய்து எனக்கு தூய அறிவை, சுத்த வித்தையைக் கொடுங்கள்." “ஸ்ரீ மாதாஜி, எனக்கு சுத்த வித்தையை கொடுங்கள்.” தயவு செய்து ஆறு முறை சொல்லுங்கள், ஏனெனில் இந்த சக்கரத்தில் ஆறு இதழ்கள் உள்ளன, ஸ்வாதிஷ்டான் சக்கரத்தில். "தயவுசெய்து எனக்கு சுத்த வித்தையை, தூய அறிவைக் கொடுங்கள்." நீங்கள் தூய்மையான அறிவைக் கேட்டவுடன், குண்டலினி உயரத் தொடங்கும். ஆனால் நீங்கள் தன்னம்பிக்கையுடன் உங்களின் அடுத்தடுத்த சக்கரங்களைத் திறப்பதன் மூலம் அதன் இயக்கத்தை நீங்கள் எளிதாக்க வேண்டும்.
எனவே தயவு செய்து இப்போது உங்கள் வலது கையை உயர்த்தி, உங்கள் வயிற்றின் மேல் பகுதியின் இடது புறத்தில் வைத்து திடமாக அழுத்தவும். உங்கள் கால்களை தள்ளி வைக்கவும். இங்கே, நீங்கள் பத்து முறை சொல்ல வேண்டும், உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்து: "அம்மா, எனக்கு நானே சுயம் குரு". தயவு செய்து கூறுங்கள், "அம்மா, எனக்கு நானே ஆசான்." "அன்னையே, நானே என்னுடைய குரு." ஏனென்றால், எல்லாப் பெரிய குருக்களான சத்குருக்களும், உங்களின் உயர்வுக்காக இந்த சக்கரத்தை உருவாக்கியுள்ளனர். மேலும் ஒரு தாய் எப்போதும் தன் பிள்ளைகள், தன்னிடம் இருப்பதை பெறுவதோடு மட்டுமல்ல, ஆனால் தன்னை விட அதிகமாக பெற வேண்டும் என்று விரும்புவார். இப்போது, ஆரம்பத்திலேயே நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும், நீங்கள் இந்த உடல் அல்ல, இந்த மனம் அல்ல, இந்த உணர்வுகள் அல்ல, இந்த நிபந்தனைகளோ மற்றும் அகங்காரமோ அல்ல, ஆனால் நீங்கள் தூய ஆத்மா. இப்போது உங்கள் வலது கையை உங்கள் இதயத்தின் மீது உயர்த்தி கொண்டு வந்து, முழு நம்பிக்கையுடன் பன்னிரண்டு முறை சொல்லுங்கள், "அம்மா, நான் தூய ஆத்மா." "அம்மா, நான் தூய ஆத்மா.
"-பன்னிரண்டு முறை. “ஸ்ரீ மாதாஜி, நான் சுத்த ஆத்மா.” முழு நம்பிக்கையுடன் நீங்கள் சொல்ல வேண்டும். நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும், எங்கும் நிறைந்துள்ள இந்த தெய்வீக சக்தி என்பது ஒரு ஞானக்கடல், கருணை நிறைந்தது மற்றும் ஆனந்தத்தின் கடல் என்பதை. நீங்கள் முழு நம்பிக்கையுடன் சொல்ல வேண்டும், "அம்மா, நான் குற்றமற்றவன்"- தயவு செய்து பதினாறு முறை, சொல்லவும். நீங்கள் சொல்ல வேண்டும் "ஸ்ரீ மாதாஜி, நானே நிர்தோஷம்-தோஷமற்றவன், நானே நிர்தோஷம்" என்று. தயவு செய்து பதினாறு முறை சொல்லுங்கள். என் திருப்திக்காகச் சொல்லுங்கள். இப்போது உங்கள் வலது கையை உயர்த்தி உங்கள் முன் நெற்றியின் மேல் வைக்கவும். நான் ஏற்கனவே உங்களிடம் கூறியுள்ளேன், நீங்கள் மன்னித்தாலும் அல்லது மன்னிக்காமல் இருந்தாலும், நீங்கள் எதுவும் செய்யவில்லை. எனவே இப்போது உங்கள் தலையை முடிந்தவரை குணிந்து, இங்கே, அனைத்து பணிவுடன், ஒவ்வொருவரையும் மன்னியுங்கள்!
வெறுமனே மன்னிக்கவும்; உங்களை தொந்தரவு செய்த மற்றும் உங்களை சித்திரவதை செய்தவர்களைப் பற்றி நினைக்க வேண்டாம், ஆனால் அவர்களை மன்னியுங்கள். நீங்கள் துன்பச் சுமையிலிருந்து விடுபட அதுவே சிறந்த வழியாகும், ஏனென்றால் நீங்கள் மன்னிக்காவிட்டால் தவறான கைகளில் ஆட்டுவிக்கப்படுவீர்கள். இப்போது உங்கள் இதயத்திலிருந்து சொல்லுங்கள், எத்தனை முறை என்பதல்ல, தயவு செய்து உங்கள் இதயத்திலிருந்து சொல்லுங்கள். மன்னிப்பது மிகவும் கடினம் என்று பலர் கூறுகிறார்கள். இதில் என்ன கஷ்டம் இருக்கிறது? – அதை வெறுமனே சொல்ல வேண்டும் அவ்வளவுதான். இப்போது உங்கள் வலது கையை உங்கள் தலையின் பின்புறமாக பிடறியில் வைக்கவும், உங்கள் தலையை முடிந்தவரை பின்னால் சாய்க்கவும், உங்கள் தலையை முடிந்தவரை பின்னால் சாய்க்கவும், இங்கே மீண்டும் நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து சொல்ல வேண்டும், "ஓ தெய்வீக சக்தியே, நான் ஏதேனும் தவறு செய்திருந்தால், தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் அறியாமல் ஏதேனும் தவறு செய்திருந்தால், தயவு செய்து என்னை மன்னியுங்கள்.” அதையும் உங்கள் இதயத்திலிருந்து சொல்லுங்கள். இப்போது உங்கள் கையை முழுவதுமாக விரித்து உங்கள் குழந்தைப் பருவத்தில் மென்மையான எலும்பாக இருந்த உச்சிக்குழி எலும்பு பகுதியின் மேல் உங்கள் உள்ளங்கையின் மையத்தை வைக்கவும். இது சமஸ்கிருதத்தில் தாலூ, தாலவ்யம் என்று அழைக்கப்படுகிறது.
இப்போது, உங்கள் தலையை முடிந்தவரை கீழே சாய்க்கவும், கீழே சாய்க்கவும். இப்போது, விரல்களை வெளிப்புறமாக நீட்டி, உள்ளங்கையால் அழுத்துவதன் மூலம் உங்கள் உச்சந்தலையை அழுத்தத்துடன் சுழற்ற முயற்சிக்கவும். தயவு செய்து உங்கள் விரல்களை வெளியே நீட்டி நல்ல அழுத்தத்தை கொடுத்து ஏழு முறை கடிகார திசையில் சுழற்றவும். இங்கே மீண்டும், நான் உங்கள் மீது ஆத்ம விழிப்புணர்வைக் கட்டாயப்படுத்த முடியாது, நீங்கள்தான் அதை கேட்க வேண்டும். உங்கள் கையை அழுத்தி சுழற்றும்போது, ஏழு முறை சொல்லுங்கள், "அம்மா, தயவு செய்து என் ஆத்ம விழிப்புணர்வை எனக்குத் தாருங்கள்." "அம்மா, தயவு செய்து என் ஆத்ம விழிப்புணர்வை எனக்குத் தாருங்கள்." நான் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. தயவுசெய்து உங்கள் கைகளை கீழே இறக்கவும். கண்களை மிக மெதுவாக திறக்கவும். இப்போது, உங்கள் வலது கையை இப்படி என்னை நோக்கி வைத்து, உங்கள் தலையை குனிந்து உங்கள் தலையிலிருந்து குளிர்ந்த காற்று வருகிறதா என்று நீங்களே பாருங்கள்.
உச்சந்தலையிலும் பார்க்கவும். சிலர் அதை மிக அருகில் பெறுவார்கள், ஆனால் மேலே இல்லை சிறிது உயரத்தில், அல்லது சிலர் அதை ஜெட்-தாரையாக, கொஞ்சம் உயரத்தில் பெறுவார்கள். அது சூடாகவும் இருக்கலாம், சூடாகவும் இருக்கும். நீங்கள் மன்னிக்கவில்லை என்றால், அது நிச்சயமாக சூடாக இருக்கும். இப்போது, தயவுசெய்து உங்கள் இடது கையை என்னை நோக்கி வையுங்கள். இப்போது, மீண்டும் உங்கள் தலையை குனிந்து, உங்கள் தலையிலிருந்து குளிர்ந்த காற்று அல்லது சூடான காற்று வருகிறதா என்று நீங்களே பாருங்கள். சஹஜயோகாவில் எதோ ஒன்றாக ஆகி இருக்கிறோம் என்பதை உங்களுக்கு நீங்களேதான் சான்றளிக்க வேண்டும்; நான் சொன்னது போல் இங்கு சான்றிதழ் என்பது இல்லை. ஒருவேளை சிலர் சூடான காற்றை உணர்ந்திருக்கலாம், பரவாயில்லை. இப்போது, மீண்டும் உங்கள் வலது கையை என்னை நோக்கி வைத்து, உங்கள் தலையை குனிந்து மீண்டும் நீங்களே கவனித்துப் பாருங்கள். இப்போது, கையை உங்கள் தலையின் மேல் வைக்க வேண்டாம், சிறிது உயரத்தில், நீங்கள் அதை உணருவீர்கள், கொஞ்சம் உயரத்தில்.
இப்போது தயவு செய்து உங்கள் கைகளை என்னை நோக்கி வைக்கவும், என்னை கவனிக்கவும், சிந்திக்க வேண்டாம். உங்களால் முடியும். யாரெல்லாம் விரல் நுனியில் குளிர்ந்த காற்றை உணர்ந்தார்களோ, அல்லது சூடான காற்றை உணர்ந்தவர்கள், மற்றும் இரண்டு கைகளிலும் உணர்ந்தவர்கள் அல்லது உச்சந்தலை எலும்பு பகுதியில் அல்லது இரு பகுதிகளிலும் உணர்ந்தவர்கள் அனைவரும், தயவுசெய்து உங்கள் இரு கைகளையும் உயர்த்தவும். தயவுசெய்து உங்கள் இரு கைகளையும் உயர்த்தவும். ஓ, என் கடவுளே! கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களில் பெரும்பாலோர் அதைப் பெற்றிருக்கிறீர்கள். உங்களில் பெரும்பாலோர் அதைப் பெற்றிருக்கிறீர்கள். இப்போது அதைப் பற்றி விவாதிக்க வேண்டாம், ஏனென்றால் நீங்கள் மன ரீதியான நிலைக்கு வந்தால் அதை இழக்க நேரிடும். அதை அனுபவிக்கவும்.
இன்றிரவு நீங்கள் நிம்மதியாக தூங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாளை மீண்டும் உங்கள் நண்பர்களுக்கும் மக்களுக்கும் தொலைபேசி மூலம் தெரிவியுங்கள்; ஏனென்றால் நீங்கள் அதற்கு பணம் செலுத்த தேவையில்லை மற்றும் எதுவும் செய்ய வேண்டியதில்லை, இது உங்களுடையது - தாய் பூமிக்கு விதைகளை முளைக்க வைப்பதற்கு எப்படி பணம் வசூலிப்பது என்று தெரியாது என்பது போல. எனவே இதுவே உங்கள் பூர்வ புண்ணியமும் கூட. இன்று கிடைக்காதவர்களுக்கு நாளை கிடைக்கும். எனவே நீங்கள் அனைவரும் நாளை வரவும், உங்கள் நண்பர்களையும் அழைத்து வரவும். எவருக்கும் உங்களால் கொடுக்க முடிந்த சிறந்த விஷயம் இதுதான். இதற்காகத்தான் நாம் காத்திருந்தோம். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. தயவு செய்து நாளை வாருங்கள். ஆத்மாவின் குணம், ஆத்மா என்றால் என்ன என்பதை நான் உங்களுக்கு விளக்குகிறேன்.
இப்போது நான் என்ன செய்தேன் என்று பாருங்கள்... நீங்கள் அனைவரும் வந்து தரிசனம் செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இப்போது நான் உங்கள் முன் அமர்ந்திருக்கிறேன், அதுதான் தரிசனம். என் பாதங்களைத் தொட வேண்டிய அவசியமில்லை, அவசியமில்லை. நாளை பார்ப்போம்...... நீங்கள் அதை செய்ய மிகவும் விரும்புகிறீர்கள், அதை செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்கு அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்! நாளை உங்கள் கேள்விகளைக் கொண்டு வாருங்கள். தயவுசெய்து உங்கள் கேள்விகளைக் கொண்டு வாருங்கள், பதிலளிப்பதில் நான் மகிழ்ச்சி அடைவேன்.